Ad Code

Responsive Advertisement

வால்பாறை அரசு பள்ளியில் தமிழ் படிக்கும் வட மாநில குழந்தைகள்

வால்பாறை அருகே, அரசுப் பள்ளியில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை சேர்ந்த குழந்தைகள், தமிழ் படிக்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதி யில், தொழிலாளர் பற்றாக்குறையால், அசாம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து, தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள, நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேச மாநிலங் களை சேர்ந்த, 28 மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். முதல் வகுப்பில், அவர்களின் தாய்மொழியான இந்தியுடன், தமிழ்மொழியும் கற்றுத் தரப்படுகிறது. இதற்காக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், இரண்டு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள், தமிழ் சரளமாக பேசவும், எழுதவும் கற்று உள்ளனர்.
தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் கூறியதாவது: இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில வழிக்கல்வி கற்றுத் தரப்படுகிறது. வெளிமாநில குழந்தைகளுக்கு, இரண்டு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், தனியாக பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள், பிற மாணவர்களிடம் மிகுந்த நட்புடன் பழகுகின்றனர். குறிப்பாக, தமிழ்மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement