Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியலை வெளியிடக்கோரி டி.ஆர்.பி. அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள் டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது.

மற்ற பாடங்களுக்கு இறுதி பட்டியல் வரவில்லை. பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு இறுதி பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு தேர்வர்கள் கூறினர்.

இதுகுறித்து அறிவொளி கூறுகையில், "பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement