பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாட நூல் கழகமானது, தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழகம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை இலவசமாக அச்சிட்டு வழங்குவதுடன், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்களை அளித்து வருகிறது.
இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கென பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அவர்களுக்கு வரைபடப் பெட்டி, உலக வரைபடங்கள் என பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவைப்படும் புத்தகப் பை உள்ளிட்ட பொருள்கள், பள்ளிக் கல்வித் துறையின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இயக்குநர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையைப் போக்கி ஒரே அமைப்பின் கீழ் அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்யும் வகையில், தனியாக ஒரு கழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அவசரச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு பாட நூல் கழகம் என்பதை "தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான சட்ட மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை முதல்வர் ஜெயலலிதா சார்பில், நிதித்துறை, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை