Ad Code

Responsive Advertisement

TET தேர்ச்சி பெறவில்லை - ஆசிரியர்கள் நீக்கத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி,
பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.


இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement