Ad Code

Responsive Advertisement

மாணவர்களிடம் மோடி நேரடியாக பேச்சு : ஆசிரியர் தினத்தன்று சிறப்பு ஏற்பாடு

ஆசிரியர் தினத்தன்று, பள்ளி மாணவர்களிடம், பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று, மத்திய மற்றும் மாநில அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்படுவது வழக்கம். பிரதமராக மோடி பதவியேற்ற பின் வரும், இந்த கல்வியாண்டு ஆசிரியர் தினத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுடன் பேச உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை மனிதவள மேலாண்மை அமைச்சகம் செய்து வருகிறது. பிரதமர் அலுவலக கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பிரதமர் மோடியின் பேச்சை பள்ளி களில் ஒளிபரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'எஜுசாட்' வசதியுள்ள மையங்கள் மூலமாகவும், டிஷ் 'டிவி' மற்றும் இன்டர்நெட் இணைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை, அவரவர் வசதிக்கேற்ப, அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்து கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும், செப்., 5ம் தேதி மாலை, 3:00 மணி முதல், 4:45 மணி வரை, பிரதமர் மோடி, மாணவர்களிடம் பேச உள்ளார். அதில் பங்கேற்கும் பள்ளிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மாநில அரசு அறிக்கையாக, செப்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நிகழ்வாக, பாரத பிரதமர், பள்ளி மாணவ, மாணவியரிடம் பேசும் நிகழ்ச்சி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement