Ad Code

Responsive Advertisement

என்.ஐ.டி., கல்வி கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் உள்ள தேசியதொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) இந்தாண்டு பி.டெக்., மற்றும் எம்.டெக்., மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 35 ஆயிரத்தில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண குழுதமிழகத்தில், திருச்சி உட்பட, நாடு முழுவதும், 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன. இவற்றில், பி.டெக்., - எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.

தேவை அடிப்படையில், இப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றி அமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்தது.தொடர்ந்து, இதற்காக அமைக்கப்பட்ட, என்.ஐ.டி.,க் களுக்கான கவுன்சில், அறிக்கை ஒன்றை, மத்திய மனிதவள மோம் பாட்டுத் துறைக்கு அளித்தது.இந்த அறிக்கை அடிப்படையில், கட்டணக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு, 2013 அக்., 18ம் தேதி கூடி, புதிய கட்டணத்தை மாற்றி அமைத்தது.இதன்படி, 2014 - 15ல், புதிதாக, பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் சேரும் மாணவர்கள், ஆண்டு கல்வி கட்டணமாக, 35 ஆயிரம் ரூபாய்க்கு பதில், 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.ஆனால், ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. மேலும், அதே கூட்டத்தில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பிற்கான கல்வி கட்டணம், 35 ஆயிரத்தில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக குறைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டணம், ஏற்கனவே பதிவு செய்துள்ள, தற்போது பதிவு செய்யும் மாணவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.அறிவுறுத்தல்மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான, கல்விக் கட்டணம், 100 சதவீதமும், மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவிகளின் வாயிலாக பெறப்படுகிறது.என்.ஐ.டி.,க்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கல்வி கடன் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement