தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும்.அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.
நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.
இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை