Ad Code

Responsive Advertisement

இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் எழுதப்பட்டுள்ள முதல்வர் பற்றிய அவதூறான கருத்துக்கள் - குவியும் கண்டனங்கள்



இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இன்று காலை ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையின் தலைப்பு முதலமைச்சரை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளது. பாரதிய ஜனதா தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் சமீபத்திய இலங்கைப் பயணம் குறித்து பேசும் அக்கட்டுரையில், தமிழக அரசால் மீனவர் விவகாரத்தில் இனி மத்திய அரசிடம் இருந்து எந்த சலுகையும் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு இருப்பதாகவும் இனி தமிழக அரசால் இலங்கை அரசை மிரட்ட முடியாது என்பது போன்ற வாசகங்கள் அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது, அந்த படகுகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா ? என்ற கேள்வியும் அந்த கட்டுரையில் உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதால் தான் இது போன்ற கைது நடவடிக்கைகள் தொடருவதாக குறிபிடப்பட்டுள்ளது.

குவியும் கண்டனங்கள்
முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் வெளியான தரக்குறைவான கருத்துக்கு தி.மு.க உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், இதுபோன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில் யார் கருத்து வெளியிட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமானப்படுத்தியது சரியல்ல என்று கண்டித்துள்ளார்.

பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை செளந்திரராஜன் கூறுகையில், பெண் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனை உலகத்தில் உள்ள பெண் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், இது இலங்கை அரசின் சர்வாதிகார போக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement