Ad Code

Responsive Advertisement

மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் அருகே, 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி முத்துலட்சுமி (43) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் பெரியசாமி மகன் கோபியை (8), சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தால் கடந்த 1ம் தேதி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி குச்சியால் அடித்ததாக தெரிகிறது. இதனிடையே, சனிக்கிழமை வீட்டிலிருந்த கோபியின் உடலை அவனது பெற்றோர் பார்த்து, காயம் இருந்ததால் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து, மாணவனின் தாய் ராஜேஸ்வரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் நாகவள்ளி வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement