''தமிழக பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 6ம் தேதி துவங்கும்,'' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில், அரசு சார்பில், ஏழு மற்றும் தனியார் கல்லூரிகள், 14 என, 21 பி.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,155 இடங்கள் உள்ளன. இவை, ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு, பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகிக்கப்பட்டது. 10,450 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். ''விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான, சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம் 6ம் தேதி முதல், 9ம் தேதி வரை, சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் நடக்கும்,'' என, நெல்லையில் நேற்று, ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை