Ad Code

Responsive Advertisement

ஸ்குவாஷ்: காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற தமிழக ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு


காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


இது தொடர்பாக இருவருக்கும் அவர் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே வாழ்த்துக் கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.

அவற்றின் விவரம்:

உங்களது விளையாட்டு வாழ்க்கையில் மற்றுமொரு சிறப்பான வெற்றியாக கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றது குறித்து அறிந்ததும் மகிழ்ச்சியடைந்தேன். காமன்வெல்த் விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டிகளில் முதல்முறையாக இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவையும், தமிழ்நாட்டையும் நீங்கள் பெருமையடைய வைத்துள்ளீர்கள்.

தமிழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கான பரிசுத் தொகையை ரூ.50 லட்சமாக நான் உயர்த்தியுள்ளேன். இதையடுத்து, உங்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். உங்களது வெற்றிக்கும், வெற்றிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்தியா, தமிழ்நாட்டின் சார்பில் எதிர்காலத்தில் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அந்தக் கடிதங்களில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement