Ad Code

Responsive Advertisement

இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்

தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement