Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement