Ad Code

Responsive Advertisement

ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம் ரூபாயாக உயர்வு - பி.எஃப். பிடித்தம் செய்ய மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், PF பிடித்தம் செய்ய மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்தும் திட்டம், கடந்த பல மாதங்களாக ஆய்வில் இருந்து வந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை மாதம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 28 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று PF பிடித்தம் செய்யப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் கூடுதல் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement