Ad Code

Responsive Advertisement

குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற 83 பேர் கதி?உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல்."!

குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற, 83 பேரின் உத்தரவு செல்லாது' என, உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, தமிழக அரசு சார்பில், நேற்று, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 


'இந்த மனு, 10 நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பத்து ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்வு பெற்ற, 83 பேர், பல்வேறு துறைகளில், தற்போது, உயர் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, 83 பேரின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போது தேர்வு எழுதியவர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், '83 பேரின் தேர்வு செல்லாது' என, உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இதிலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, 83 பேரையும் உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே முன், தமிழக அரசு தரப்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர், 'தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என, வலியுறுத்தினார்.அதற்கு, ''உடனடியாக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. 10 நாட்களுக்குள், மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,'' என, நீதிபதி அனில் தவே தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement