Ad Code

Responsive Advertisement

TNTET : இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல்

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. pongada neengalum unga aasiriyar thaguthi thervum..............

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement