Ad Code

Responsive Advertisement

SIDBI - வங்கியில் துணை மேலாளர் பதவி.

சிட்பி என்ற பெயரால் பலராலும் அறியப்படும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் லிமிடெட் நிறுவனம் (Small Industries Development Bank of India -SIDBI) சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது. இந்த வங்கியில் காலியாக உள்ள 80 கிரேடு ஏ பிரிவிலான அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வயது:சிட்பி வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று அறியவும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.07.2014



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement