சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய்கிஷன் கவுல் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சஞ்சய்கிஷன் கவுல் பதவி ஏற்றார். ஆளுநர் ரோசய்யா சஞ்சய்கிஷன் கவுலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.