Ad Code

Responsive Advertisement

1997 காலியிடங்கள் Data Entry Operator பணி: SSC அறிவிப்பு

அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 1997
தேர்வு:
ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி லெவல் (10 +2) தேர்வு, 2014
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 1006
2 லோயர் டிவிஷன் கிளார்க் - 991

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
01.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமும், லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. SC, ST,மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
14.08.2014

தேர்வு நடைபெறும் தேதி:
11.11.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CHSLE-
 2014%20%20Notice%20E.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement