Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு ஹெபடைடிஸ் பி (HBsAg) தடுப்பூசி மருந்து

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஹெபடைடிஸ் பி வைரஸ் தடுப்பூசி மருந்து போடும் திட்டத்தை சென்னை மியாட் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

உலக ஹெபடைடிஸ் விழிப்புணர்வு தினத்தை (ஜூலை 28) முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் தொடர்பாக மியாட் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் கூறியதாவது:-

""மியாட் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையிலோ அல்லது நீண்ட கால சிரமங்களுக்குப் பிறகோ சிகிச்சை பெற வருகின்றனர்.

இந்த நிலையில் ஹெபடைடிஸ் பி வைரஸ் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் பாதிப்பு ஏற்படாமல் மக்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பரிசோதனை, தடுப்பூசி மருந்து போடும் திட்டத்தை மியாட் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

1,000 மாணவர்களுக்கு...இந்தத் திட்டத்தின் கீழ் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மியாட் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஹெபடைடிஸ் பி ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு இல்லை என்ற முடிவை உடனடியாக கண்டறிந்து, அத்தகையோருக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மருந்து போடப்பட்டது; தொடர்ந்து ஒரு மாதம் கழித்தும், 6-ஆவது மாதம் என அனைவருக்கும் மூன்று தவணைகளாக இந்தத் தடுப்பூசி மருந்து போடப்படும்.

வினாடி-வினா போட்டி: ஹெபடைடிஸ் பி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ ரீதியான விளக்கங்கள் அடங்கிய தகவல் பலகைகளும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்தன.

ஹெபடைடிஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான"மானோமெட்ரி' உள்ளிட்ட பரிசோதனை, சிகிச்சை முறைகளும் விளக்கப்பட்டன. ஹெபடைடிஸ் பி குறித்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும்'' என்றார் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement