Ad Code

Responsive Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கெளல் பதவியேற்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் 27-ஆவது புதிய தலைமை நீதிபதியாக புது தில்லியைச் சேர்ந்த சஞ்சய் கிஷன் கெளல் (எஸ்.கே.கெளல்) சனிக்கிழமை பதவியேற்றார்.
அவருக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கெüலுக்கு முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தப் பதவியேற்பு விழா சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பா.வளர்மதி, கோகுல இந்திரா, ரஹீம், டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர, தலைமை நீதிபதியின் மனைவி ஷிவானி, அவரது இரண்டு மகள்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புது தில்லியைச் சேர்ந்தவர்

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.கே.கெüல் (55), 1958-ஆம் ஆண்டு பிறந்தார். தனது பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் புது தில்லியில் நிறைவு செய்த அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1982-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார்.

அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வழக்குரைஞராக பதிவு செய்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார்.

தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் 27-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட எஸ்.கே.கெüல், பதவியேற்பு விழா முடிந்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார்.

அங்கு சென்று தலைமை நீதிபதியின் இருக்கையில் சற்று நேரம் அமர்ந்தார்.

பின், உயர்நீதிமன்றத்தில் உள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தார். தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்துக்கு வந்ததும் போலீஸார் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement