Ad Code

Responsive Advertisement

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் மத்திய அரசின் அறிவியல் ஆய்வு விருது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஒன்றியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய அறிவியல் கழகத்தின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது காசோலை வழங்கும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளில் மத்திய அரசின் தேசிய அறிவியல் கழகம் மூலம் அறிவியல் கண்காட்சிகள் நடந்தது. இதில் சிறப்பாக அறிவியல் கருவிகள் வடிவமைத்திருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்து 2013-14 கல்வி ஆண்டிற்கான புத்தாக அறிவியல் ஆய்வு விருதாக தலா 5,000 ரூபாய்க்கு காசோலை வழங்கினர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., டி.இ.ஓ., தனமணி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு விருது மற்றும் காசோலைகளை அமைச்சர் மோகன் வழங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, நகர்மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அரசு, சர்க்கரை ஆலை தலைவர் கதிர்தண்டபாணி, சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, அரசு வழக்கறிஞர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக குபேந்திரன், கவுன்சிலர்கள் முருகன், குட்டி, குமரேசன் பங்கேற்றனர். பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 321 பேருக்கு 11 லட்சத்து 27,000 ரூபாய் மதிப்பிலான அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement