அரசுப்பள்ளிகளில், செயல்பட்டு வரும் ஆங்கில வழிக்கல்வி முறை மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால், இவ்வழியில் பயிலும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களும் கல்வி பயிலும் வகையில், அரசு சார்பில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக தயார் செய்யும் வகையில், கல்வி கற்பிப்பு முறை உள்ளிட்ட பலவற்றிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இம்மாணவர்களும் ஆங்கிலம் சரளமாக பேசும் வகையில், ஆங்கில வழிக்கல்வி துவங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்தாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில், இம்முறை துவங்கப்பட்டது. ஒன்றியங்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.புதியதாக துவங்கப்பட்ட வகுப்புகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையும் நடைபெற்றன. இதற்காக தனியாக புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்தாண்டு மேலும், குறிப்பிட்ட பள்ளிகளில் இம்முறையைஅமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், இவ்வழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. ஆனால் போதுமான அளவிற்கு புத்தகங்கள் கிடைக்காததால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எப்போது வரும்? :
ஆங்கில வழிக் கல்வி முறை கடந்தாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளிலும்; இந்தாண்டு இரண்டு மற்றும் ஏழாம் வகுப்புகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்காததால், ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் பெயரளவிற்கு செயல்படும் சூழல் உள்ளது. இப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர்களும் தினசரி வந்து தமிழ் வழிக்கல்வி முறையில் கற்பிக்கும் வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி துவங்கி ஒன்றரை மாதங்கள் ஆகியும், இதுவரை புத்தகங்கள் வழங்கப்படாததால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அரசு உடனடியாக இதனை கவனித்து, புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
'ஆசிரியர்கள் தனியாக நியமிக்க வேண்டும்'
: ஆங்கில வழிக்கல்வி முறைக்கென தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களைக்கொண்டே ஆங்கில வழி கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில், குறைவாக இருக்கும் ஆசிரியர்கள் இந்த வகுப்புகளையும் கவனிப்பதால், ஆசிரியர்களுக்கு சுமை அதிகரிக்கும் சூழல் உள்ளது. ஆசிரியர்கள் இதற்கென தனியாக நியமிக்கப்பட்டால், வகுப்புகள் முறையாக நடத்தப்படுவதுடன், மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் அமையும். இதனை அரசு கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை