Ad Code

Responsive Advertisement

மத்திய மாநில அரசு துறைகளில் போலிகள் அதிகரிப்பு

மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளி்ல் பணிபுரிவோர் போலியான சான்றிதழ் அளித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு துறைகளில் சுமார் ஆயிரத்து 800 பேர் போலியான சான்றிதழ் அளி்த்து பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் சான்றிதழ்களை பரிசோதனை செய்யு்ம் பணியில் இவை தெரிய வந்துள்ளது. 2010-ம் ஆண்டு முதல் பணியி்ல் சேர்ந்தவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட போது இவை கண்டறியப்பட்டுள்ளது.
கல்விதகுதி மட்டுமல்ல : போலியான சான்றிதழ்களை அளி்த்து பணியி்ல் சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் கல்வி சான்றிதழ்கள் மட்டுமல்லாது ஜாதிச்சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதன்படி கண்டறியப்பட்ட ஆயிரத்து 832 பேர்களில் 276 பேர் இடை நீக்கம் மற்றும் பணிநீக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 35 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் போலியான கல்வித்தகுதி சான்றிதழ்களை அளித்து பணியி்ல் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் போலியானவர்கள் என கண்டறியப்பட்டது.
மேலும் 2008-ம் ஆண்டு சி்க்ஷாக்நியோஜன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் அளி்த்து கல்வி பணியி்ல் சேர்ந்துள்ளனர். இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் போலியான கல்வி சான்றிதழ் மற்றும் குறைவான மதிப்பெண் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement