Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் மொழி அடிப்படையில் பாரபட்சம் கிடையாது மத்திய அரசு உறுதி:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், மொழி அடிப்படையில் பாரபட்சம் கிடையாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.மாணவர்கள் போராட்டம்மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை இந்தியுடன் பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும், சிவில் சர்வீஸ் திறனறி தேர்வை (சி.எஸ்.ஏ.டி.) ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டு மாணவர்கள் கண்டன போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு 
இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் (ஆகஸ்டு 24-ந் தேதி) நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்குமாறு மத்திய பணியாளர் நலன் இணை மந்திரி ஜிதேந்திர சிங், யு.பி.எஸ்.சி.யை கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று மந்திரி ஜிதேந்திர சிங் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-குழு அமைப்புயு.பி.எஸ்.சி தேர்வுகளில் மொழி அடிப்படையில் பாரபட்சமான கொள்கையை அனுமதிக்க முடியாது என்பதை மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். தற்போது போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் கோரிக்கைகளை ஆராய்வதற்காக 3 நபர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தின் அவசரம் கருதி, இந்த குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எங்களது நடவடிக்கையை (தேர்வு ஒத்தி வைப்பு) ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.எதிர்க்கட்சிகள் அமளிமுன்னதாக மந்திரியின் பதிலுரையின் போது, ‘காஸா தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டவாறு இருந்தனர். அப்போது பாராளுமன்ற விவகார இணை மந்திரி பிரகாஷ் ஜவதேகர் எழுந்து, ‘எதிர்க்கட்சிகள் ஏன் யு.பி.எஸ்.சி. விவகாரம் குறித்து பேசாமல், காஸா தாக்குதல் குறித்து மட்டும் பேசுகின்றனர்’ என்று கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் கூறும்போது, ‘யு.பி.எஸ்.சி. விவகாரம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலன் பற்றியதாகும். இது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது பாராளுமன்றத்தின் கடமை. ஆனால் யு.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு நீதி கிடைப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வமில்லை’ என்று குற்றஞ்சாட்டினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement