மாணவர்கள் குறைவான மதிப்பெண்பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன்வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்குசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர்மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர்தாக்கல் செய்த மனுவை விசாரித்தநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில் 59% மதிப்பெண்கள் பெற்றதனது மகனுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாகமனுதாரர் ரவி தெரிவித்துள்ளார். ஆனால்60% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமேகடன் வழங்க முடியும் என்று கூறி, அந்தவங்கி கடன் வழங்க மறுத்து விட்டதாகமனுவில் அவர் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதிமனுதாரருக்கு கல்வி கடன் வழங்கஉத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதிஉத்தரவை எதிர்த்து சமந்தப்பட்ட வங்கிசார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்திய நாராயணன்ஆகியோர் அடங்கிய அமர்வுபொருளாதரத்தில் பின்தங்கியுள்ளமாணவர்களை மேம்படுத்தவே கல்விகடன் திட்டம் கொண்டுவரப்பட்டதாககூறினர். கல்வி கடனுக்கு வங்கிகள் வட்டிவசூல் செய்யும் நிலையில் 60%மதிப்பெண் என்ற வரம்பை நிர்ணயம்செய்யக்கூடாது எனக் கூறி வங்கியின்மேல் முறையிட்டு மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை