Ad Code

Responsive Advertisement

பேராசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னை: கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசனை

அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து உயர்க்கல்வி துறை செயலர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசித்து முடிவெடுக்கின்றனர்.


புதுச்சேரியில் தாகூர் கலை கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 6 அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதே பிரச்னை காரைக்கால், மாகி, ஏனாமிலும் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கல்லூரிகள் மேம்பாடு மற்றும் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கல்வித்துறை செயலர் ராகேஷ்சந்திரா, இயக்குனர் கரிகாலன் தலைமையில் அனைத்து அரசு கலை கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வரும்  தேதி பாரதிதாசன் கல்லூரியில் நடக்கிறது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement