Ad Code

Responsive Advertisement

புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு திட்டம்: ஸ்மிருதி இரானி

எதிர்கால சவால்களைச் சந்திக்கும் வகையிலும் நமது கல்வி நிறுவனங்களின் தரமின்மை, ஆராய்ச்சி வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் போதிய வசதிகள் இல்லாத நிலையை கருத்தில் கொண்டும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.


கல்வி குறித்த தேசியக் கொள்கை 1986-ல் மத்திய அரசு சில திருத்தங்களை செய்து 1992 ஆம் ஆண்டு செயல்படுத்தியது. அனைத்து மாணவர்களும் சாதி, மத, இன, பாலினம், இருப்பிடம் போன்ற வேறுபாடுகள் ஏதும் இன்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதை இந்த கொள்கை வகை செய்கிறது. 

பொதுவான கல்வி அமைப்பை இந்த தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வந்தது. இதன்படி 10+2+3 கல்வி முறை நாடு முழுவதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் இந்த கல்வி முறை நினைவுச் சின்ன மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

உரிமை அடிப்படையிலான ஆரம்பக் கல்வி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடு நிலைக் கல்வியை விரிவுப்படுத்துவது, உயர் நிலை கல்வியை மாற்றி அமைப்பது போன்ற சில காரணிகளின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல், தொழில் திறன் மேம்பாடு பெருகிவரும் புதிய தொழில்நுட்பங்கள், உலகளவிலான அதிவிரைவு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இவை எந்த மாற்றத்தையும் புதிதாக ஏற்படுத்த வில்லை என்று மத்திய அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement