Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம்




மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையிலும், மாணவர்களின் விபரங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, கடந்த ஆண்டு, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களின் விபரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. மாணவரின் பெயர், தந்தை, தாய் பெயர், ஆண்டு வருமானம், ஜாதி, மொழி, மதம், முகவரி, உடன் பிறந்தவர்கள், ரத்தவகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பெறப்பட்டது. கடந்த ஆண்டு ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களில், கிராம அளவில் உள்ள, ஒரு சில தொடக்க பள்ளிகள், ரத்தவகை குறிப்பிடாமல் வழங்கியிருந்தது. தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்விக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ரத்தவகை சேகரிக்காத பள்ளிகள், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பள்ளிகளில், ரத்தவகை முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்த வகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ரத்தவகை கண்டறியும் முகாம் நடத்த, அரசு உத்தரவிட்டிருப்பதன் மூலம், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement