Ad Code

Responsive Advertisement

தமிழில் மட்டுமே தட்டச்சு தேர்ச்சி: பெண்ணுக்கு அரசுப் பணி வாய்ப்பு மறுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும், பள்ளியில் படித்த போது தமிழில் மட்டுமே தட்டச்சுத் தேர்வை முடித்திருப்பதால் பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தேர்வாணையம் மீது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் வைகைநகரில் வசித்து வரும் வி.சுப்பிரமணியன் மனைவி சி.உதயபானு (46). இவர், 1986-ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை ராமநாதபுரம் புனித அந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் தொழில் நுட்பப் பிரிவில் (4ற்ட் ஞ்ழ்ர்ன்ல்) தட்டச்சில் தமிழ்ப் பாடத்தை ஒரு பாடமாக எடுத்து அதற்கான தேர்விலும் 200-க்கு 141 மதிப்பெண்கள் எடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், கடந்த 25.8.2013-இல் நடந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 23.6.2014 அன்று சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்து முடிந்துள்ளது. மறுநாள் பணிநிரவல் தொடர்பான கலந்தாய்வில் கலந்து கொள்ள இருந்த இவரை, தேர்வாணைய அதிகாரிகள் திடீரென கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பள்ளியில் படித்த போது தமிழில் மட்டுமே தட்டச்சுத் தேர்வை முடித்திருப்பதால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சி.உதயபானு கூறியது:

1986-இல் பிளஸ் 2 படித்த போது பள்ளியில் தமிழ் தட்டச்சுப் பாடத்தில் 200-க்கு 141 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

தட்டச்சுத் தேர்வில் பள்ளியில் தமிழிலும், பள்ளிக்கு வெளியே தனியார் பயிற்சிப் பள்ளியில் ஆங்கிலத்திலும் உயர்நிலைத் தேர்வு எழுதி இரண்டிலுமே (senior grade) உயர்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்துள்ளேன்.

25.8.2013 அன்று டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வை எழுதினேன்.

தேர்வில் நான் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் 23.6.2014 அன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கும், மறுநாள் (24.6.2014) பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்க வருமாறும் தேர்வாணையம் அழைப்பு அனுப்பி இருந்தது. நானும் கலந்து கொண்டேன். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு, அன்று மாலையில் தேர்வாணைய அதிகாரிகள் திடீரென பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துகொள்ள எனக்கு அனுமதி இல்லை என்றார்கள்.

காரணம் கேட்டபோது, "பள்ளியில் படித்த போது தமிழில் மட்டுமே தட்டச்சு பாடத்தை முடித்துள்ளீர்கள்.

ஆங்கில தட்டச்சையும் பள்ளியிலேயே முடித்திருக்க வேண்டும்.

தனியார் பள்ளியில் ஆங்கில தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தமிழுக்கென்று தனியாக எந்த அரசாணையும் இல்லை' எனக் கூறி கலந்தாய்வில் பங்கேற்க முடியாது; அரசாணையும் அப்படித்தான் இருக்கிறது என்றனர்.

எனினும், தேர்வில் வெற்றி பெற்ற எனக்கு, அரசு விதிமுறைகளைத் தளர்த்தி அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் உதயபானு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement