Ad Code

Responsive Advertisement

தமிழ்ப் பல்கலை.யில் அக்குபஞ்சர் பட்டப்படிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அக்குபஞ்சர் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்திருப்பது:
அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான 3 ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பு தமிழகத்தில் முதல் முறையாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு
தொடங்கப்பட்டுள்ளது.

கம்பம் அகாதெமி ஆப் அக்குபஞ்சர் என்ற நிறுவனத்தாரின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
இந்தப் படிப்புக்கான சேர்க்கை பயிற்சி மையங்கள் தஞ்சாவூர், கம்பம், கோவை, சென்னை, திருப்பூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ளன.
பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பட்டப்படிப்பின் முதலாமாண்டில் சேர்க்கை பெறலாம். பிளஸ் 2 கல்வித் தகுதியோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டயப் பயிற்சியை ஏற்கெனவே நிறைவு செய்தவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கை பெறலாம்.
திறந்தவெளிக் கல்வி முறையில் பட்டப்படிப்பு பயின்றவர்களும் அக்குபஞ்சர் பட்டப்படிப்பில் சேரலாம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement