Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தகுதித் தேர்வில் சிறப்புத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, திருச்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. 

சிறப்புத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.திருச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் திருச்சியில் நேற்று நடைபெற்றன. 147 மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர். 

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத் திறனாளிகள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement