தனியார் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களைகல்விக் கட்டணம் செலுத்தச்சொல்லி அவசரப்படுத்தக்கூடாது என்று கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.டில்லிபாபு, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களை கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு அமைச்சர் பழனியப்பன் பதிலளித்து பேசியதாவது:
மாணவர் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொறியியல் படிப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 21,259 பேரும், மருத்துவப் படிப்பில் 37,146 பேரும் பயன்பெற்று வருகின்றனர். அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றும், கட்டணத்தை உடனடியாக கட்டச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை