Ad Code

Responsive Advertisement

இங்கிலாந்து பார்லியில் காந்திக்கு சிலை: அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவின் அரை நிர்வாண பக்கிரி என வின்சென்ட் சர்ச்சிலால் அழைக்கப்பட்ட காந்திக்கு இங்கிலாந்து பார்லி வளாகத்தி்ல் சிலை அமைக்கப் படும் என அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ் போன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹாக்கே ஆகியோர் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளனர். அப்போது இந்திய சந்தையில் இங்கிலாந்து நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
முன்னதாக இங்கிலாந்து அமைச்சர் டுவிட்டர் இணையத்தில் வெளி்யிட்டுள்ள அறிக்கையி்ல் இந்தயாவில் இங்கிலாந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு போராட்டங்கள் மற்றும், சிறை வாழ்க்கையை அனுபவித்த காந்தி்க்கு சிலை வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
இங்கிலாந்து பார்லிமென்ட்டின் வளாகத்தி்ல் உள்ள வெஸ்ட் மினிஸ்டரி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உலக தலைவர்களி்ன் சிலை வரிசையில் காந்திக்கும் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதன்முதலாக இங்கிலாந்து அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போதை தென் ஆப்ரிக்க அரசாங்கத்தின் தலைவராக ஜான் ஸ்மத் இருந்தார். காந்தியின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தார். அவருக்கும் இங்கிலாந்து பார்லியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்திக்கும் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement