Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து: நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையின் முழு விவரம்

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து குறித்து ஆய்வு செய்த நீதிபதி சம்பத் கமிஷன், பள்ளி நிர்வாகம் மீதும் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டியது. இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க சில பரிந்துரைகளையும் அந்த கமிஷன் அளித்தது.


கும்பகோணம் பள்ளித் தீவிபத்து தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையில் 4 பேர் கொண்ட கமிஷன் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளி நிர்வாகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டது.

விதிகளை அப்பட்டமாக மீறி ஒரே கட்டடத்தில் மூன்று பள்ளிகள் இயங்கியதும், கூரைக் கொட்டகையில் பள்ளியை நடத்தியதும் விபத்திற்கு காரணம் என்று அந்த கமிஷன் கூறியது.

கவனக்குறைவாக இருந்த மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் ஆகியோர் தீ விபத்து நிகழ்வதற்கு பொறுப்பானவர்கள் என்று சம்பத் கமிஷன் குற்றம்சாட்டியது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் மாணவர்களை காப்பாற்றாமல் ஆசிரியர்கள் தப்பி ஓடியதாக கூறிய சம்பத் கமிஷன், ஆசிரியர்களுக்கு பேரிடர் கால நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

உணவு சமைக்கும் கூடங்கள் பள்ளி வளாகத்திற்குள் இருக்கக்கூடாது என்றும், ஒரு வகுப்பறையில் 20 குழந்தைகள்தான் அமர்த்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. பள்ளிகளுக்கு திடீரெனச் சென்று ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சம்பத் கமிஷன், நர்சரி பள்ளிகள் பெருகி வருவதால் அதற்கென தனி இயக்குநரகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement