Ad Code

Responsive Advertisement

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள் : கல்லூரி மாணவர்கள் தீபச்சுடர் ஓட்டம்


உலக புகழ் பெற்ற, தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும், பிரக தீஸ்வரர் கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன். இவரும், தந்தை வழியைப் பின்பற்றி, அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாக, பிரமாண்ட கோவிலை கட்டினார்.
இந்த கோவில், தற்போது, உலக பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக, அவர் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழா, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு, கங்கை கொண்ட சோழபுரம், பெருவுடையார் கோவிலை சுற்றி, ?,??? மெகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான தீபச்சுடர், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு, நேற்று காலை, தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. தீபச்சுடரை பின்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள், ?,??? பேர், இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். தீபச்சுடர் மற்றும் இருசக்கர வாகன பேரணியை, தஞ்சை பெரிய கோவில் முன், கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார். தீபச்சுடர், விழா நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement