Ad Code

Responsive Advertisement

'பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை'

'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பள்ளி மாணவர்களில் சிலர், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று பயணிப்பவர்களை, பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement