சென்னை:ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு (என்.சி.டி.இ.,) விதிகளின் படி, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்' என, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) தலைவர் வேத பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.யு.ஜி.சி., தலைவர், அனைத்து ஆசிரியர் படிப்புகளை வழங்கும் பல்கலைகள், மத்திய பல்கலைகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கு, ஆசிரியர் கல்வி குறித்த கடிதம் அனுப்பி உள்ளார்.
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்புகளை கொண்டு வர வேண்டும்
யு.ஜி.சி., ஆசிரியர் கல்லுாரிகள், பல்கலை வளாகத்தில் இருப்பின், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான, புத்தாக்க பயிற்சி மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
ஆசிரியர் கல்வியில் புதிய யுக்திகளை உருவாக்க வேண்டும்.
ஆசிரியர் கல்வியில், முதுகலை படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர் கல்வி குறித்த அனைத்து ஒழுங்கு முறைகளும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் விதிகள் படி அமைந்திருக்கிறதா என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல், கல்லுாரி ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லுாரி இயக்குனர்களுக்கும், கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், கல்லுாரி ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லுாரிகளில், ஆசிரியர் பட்டப்படிப்புகளை துவக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை