முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர்தேர்வு வாரியம வட்டாரம் நேற்று தெரிவித்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில்,நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன.
இதையடுத்து,நீதிமன்றஆணை அடிப்படையில்ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வுபட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும்முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என,தெரிவித்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை