Ad Code

Responsive Advertisement

சொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

 'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், செப்டம்பர், 15ம் தேதிக்குள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:லோக்பால் சட்டப்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை, சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனால், 2014 ஆகஸ்ட், 1ம் தேதி நிலவரப்படி உள்ள, அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள் மற்றும் டிபாசிட்கள் குறித்த விவரங்களை, அனைத்து அரசு ஊழியர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே, சொத்து விவரங்களை சமர்ப்பித்தவர்களும், புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என, நாடு முழுவதும், 50 லட்சம், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும், இந்த சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஆன் - லைன் மூலம், சொத்துவிவரங்களை சமர்ப்பிக்க, 'பிரிசம்' என்ற தகவல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய, தனியாக படிவங்கள் உள்ளன. அவற்றில் தங்களின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் மட்டுமின்றி, மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களையும், மத்திய அரசு ஊழியர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement