MLA ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை. ஆனால்,அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்தமாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.சி. வீரமணி: அரசாணையின்படியே மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுகிறது. சைக்கிளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3ஆயிரம் வரைதான். ஆனால், மடிக் கணினியின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம்வரை உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்படிப்பவர்களுக்கு மட்டும் மடிக் கணினி வழங்குவது என்பது அரசின்கொள்கை முடிவு. மேலும், மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு பிளஸ் 2மாணவர்களுக்கு மடிக் கணினி விநியோகம் தடைபட்டது. இப்போது மடிக்கணினி விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுவரை 1.35 லட்சம் பிளஸ் 2மாணவர்களுக்கும், 15 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் மீதமுள்ள மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை