Ad Code

Responsive Advertisement

பள்ளி விண்ணப்பத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தை: அரசுப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளி யூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்கு பள்ளி நிர்வாகம் வழங்கிய சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில்,
சாதியை குறிப்பிடும் பகுதியில், `ஆதிதிராவிடர்’ என்ப தற்கு பதில், `ஹரிஜன்’ என அச்சிடப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து, ஆதிதமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில், வெள்ளியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய வார்த்தையைக் கொண்ட விண்ணப்பப் படிவம் தயாரிக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த வார்த்தையை சேர்க்கை விண்ணப்பத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை கள் முன் வைக்கப்பட்டன.
இதையடுத்து, சம்பவ இடத் துக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின்போது, சர்ச்சைக்குரிய வார்த்தை அச்சிடப் பட்ட விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்தியதற்கு பள்ளி நிர் வாகம் சார்பில் வருத்தம் தெரிவிக் கப்பட்டது. அந்த விண்ணப்பப் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, மாற்று விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்ததை ஏற்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement