உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உரிய கல்வி தகுதி இல்லாத ஆசிரியர்களைக்
கொண்டு விடைத் தாள் திருத்துவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்வு விடைத்தாள்களை தகுதியுடைய ஆசிரியர்களைக் கொண்டு திருத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் தேர்வு முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டதால் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பாதிப்பை சந்தித்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்குரைஞர் இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் விடைத்தாள்களை கல்வித் தகுதியுடைய ஆசிரியர்களைக் கொண்டு திருத்த வேண்டும் என 29.4.14-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும்பணி கடந்த ஜூன் 16 முதல் 5 மையங்களில் திருத்தப்படுகின்றன. இப்பணியில் கெüர விரிவுரையாளர்கள் 182 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இளங்கலை கல்லூரி படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் முதுகலை பட்டப் படிப்புக்கான விடைத்தாள் திருத்துவதாகவும் மீண்டும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை மீண்டும் இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் ண்மையில் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை கடந்த 10ம் தேதி ஏற்ற நீதிமன்றம், திருவள்ளுவர் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை