Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணை வழங்குக! மாநில அரசுக்கு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

 திருச்சி, ஜூலை 13 -25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அரசு ஆணை வழங்கிட வேண்டும் என
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கோரியுள்ளது.


சனிக்கிழமை யன்று காலை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில தலைமைச் செய லாளர் வெங்கடேசன், மாநில அமைப்பு செயலா ளர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதழ் அறிக்கையை துணைப்பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், வரவு- செலவு அறிக்கையை மாநில பொருளாளர் மதலை முத்து, வேலையறிக்கையை பொதுச்செயலாளர் இசக் கியப்பன் ஆகியோர் சமர்ப் பித்தனர்.


அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளி நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களை தமி ழக அரசு வரும் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கை யில் பட்டதாரி ஆசிரியர்க ளாக உட் படுத்தி ஆணை வழங்கவேண்டும், இடை நிலை ஆசிரியர்களின் சாதாரணநிலை ஊதியத்தை 5,200 - 2,200 தரஊதியம் 2800 என்பதை மாற்றி ஊதியக் கட்டு 2ல் வைத்து 930 - 30,800 தர ஊதியம் 4,200 என மாற்றி அறிவித்திட தமிழக முதல் வரை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் மாநில இணை செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement