Ad Code

Responsive Advertisement

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வந்தாச்சு ‘வை பை’ வசதி

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர், ரயில் நிலையங்களில் ‘வைஃபை’ (கம்பி இல்லா இன்டர்நெட் இணைப்பு) வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த  ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டில் ஏ1 மற்றும் ஏ வகை ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில்  உள்ள ஏ1 வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி விரைவில் வரவுள்ளது.


தமிழகத்தில் உள்ள 10 ரயில் நிலையங்கள் ‘ஏ’ ரகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றிலும் விரைவில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இணைய  தள வசதி உள்ள போன் இருந்தால் ‘வைஃபை’ வசதி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். இப்புதிய வசதியால், ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட  ஏராளமான பயன்கள் பயணிகளுக்கு கிடைக்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement