அரசு அனுமதியின்றி சென்னையில் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்த குமார் மற்றும் ரவிச்சந்திர பாபு முன் விசாரணைக்கு வந்தது. அதில், சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் செயல்படுவதாகவும், அவற்றில், 760 மழலையர் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது பள்ளிகள் வரன்முறை சட்டத்திற்கு எதிரானது என்றும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக, இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை