Ad Code

Responsive Advertisement

காலி பணியிடங்கள் அரசு பள்ளி அவலம்?

ஸ்ரீபெரும்புதுார், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர்மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில், ஸ்ரீபெரும்புதுார், கிளாய், ஆயக்கொளத்துார், தண்டலம், இருங்காட்டுகோட்டை, பென்னலுார், வெங்காடு, பிள்ளைப்பாக்கம், போந்துார், வடமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், நடப்பாண்டில் ஆறாம் வகுப்பில் 82 மாணவியரும், பிளஸ் 1 வகுப்பில், 260 மாணவியரும் சேர்ந்து உள்ளனர். பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொத்தம் 1,125 மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர், கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, அந்த பணியிடம் காலியானது.

மாணவியர் சேர்க்கை முடிந்தும், தலைமை ஆசிரியர் பணியிடம், நிரப்பவில்லை. இதுதவிர, கணக்குப்பதிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் என, மூன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நியமிக்கப்படாமல் உள்ளன. இதனால், இந்தபள்ளி மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

தலைமைஆசிரியர் இல்லாததால், மற்ற ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வகுப்புகளுக்கு செல்வதில்லை என்று மாணவியரும் அவர்களின் பெற்றோரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.காலி பணியிடங்களை நிரப்பி, மாணவியரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement