Ad Code

Responsive Advertisement

வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? இன்று மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.இதில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.

 
       16வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 4ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதில் புதிய எம்பிக்கள் பதவியேற்பு, சபாநாயகராக சுமித்ரா மகாஜன் நியமனம், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆகியவை நடைபெற்றன. பின்னர், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கிடையே, கோவா வில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், �முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கஜானாவை காலி செய்து விட்டது. எனவே, கடுமையான பொருளாதார நெருக்கடி, பண வீக்கம் உள்ள நிலையில் நாட்டின் ஆட்சி பொறுப்பை தே.ஜ. கூட்டணி அரசு ஏற்றுள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் நடவடிக்கை கசப்பு மருந்தாக இருந்தா லும், மக்களுக்கு அதன் பலன் இனிப்பாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மக்களவையில் ரயில்வே அமைச் சர் சதானந்த கவு டா நேற்று முன்தினம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். ரயில்வே துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 58 புதிய ரயில்களுடன் பல்வேறு திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
மானிய விவகாரம்:
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்புகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.
மானிய விவகாரம்:
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ஆற்றிய உரையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்புகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement