Ad Code

Responsive Advertisement

கூட்டுறவு வங்கி காலி இடம் விரைவில் நியமனம் - அமைச்சர் செல்லூர் ராஜு:

சட்டசபையில், கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கைமீது நடந்த விவாதம்:
தே.மு.தி.க., செந்தில்குமார்: 

கூட்டுறவு வங்கிகளில், போதிய பணியாளர்கள் இல்லாமல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதை சீர்செய்ய வேண்டும்.


அமைச்சர் செல்லூர் ராஜு: 
கூட்டுறவு வங்கிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிர்ப்ப, 2013ல் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 15ம் தேதி, தீர்ப்பு வெளியாகி உள்ளது. எனவே, காலி பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்.

செந்தில்குமார்: 1,000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில், பில் போடுவது, பொருட்களை நிறுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளை, ஒரு பணியாளரே செய்கிறார். இதனால், பொருட்கள் வழங்குவதில், நீண்ட தாமதம் ஏற்படுகிறது. எனவே,கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

அமைச்சர்: கிராமப்புறங்களில், 1,000 கார்டுகளும், நகர்ப்புறங்களில், 500 கார்டுகளும் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு, கூடுதல் பணியாளர்கள் நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, இதுபோன்ற கடைகளுக்கு, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement