Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: நாளை தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகின்றன.

சென்னை மாநகராட்சியுடன் வஜ்ரா என்ற அமைப்பு இணைந்து இந்தப் பயிற்சியை வழங்குகிறது.

13 வயது முதல் 16 வயது வரை உள்ள மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு தினமும் 1 மணிநேரம் வீதம் பயிற்தி வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சி முதல்கட்டமாக திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் பின்புறமுள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தொடக்க விழாவில், மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் (கல்வி) ஆர். லலிதா உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement